Home முக்கியச் செய்திகள் அஷோக ரன்வலவின் விபத்து… கடமை தவறிய காவல்துறையினர் : வெளியான தகவல்

அஷோக ரன்வலவின் விபத்து… கடமை தவறிய காவல்துறையினர் : வெளியான தகவல்

0

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் (Asoka Ranwala) வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த விபத்த்தில், காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையைச் செய்யத் தவறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பில் காவல்துறைமா அதிபரின் உத்தரவின் பேரில், போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் விசாரணையொன்றை மேற்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடமையைச் செய்யத் தவறியுள்ளனர்

குறித்த விசாரணையில், சப்புகஸ்கந்த காவல் நிலையப் பொறுப்பதிகாரி, விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சப்புகஸ்கந்த காவல்நிலையத்தை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த அதிகாரிகளுக்கு எதிராக காவல்துறை விசேட விசாரணைப் பிரிவின் ஊடாக ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறைமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version