Home சினிமா டிராகன் இயக்குனரின் அடுத்த பட ஹீரோ.. பல வதந்திகள் பரவிய நிலையில் அவரே பதில்

டிராகன் இயக்குனரின் அடுத்த பட ஹீரோ.. பல வதந்திகள் பரவிய நிலையில் அவரே பதில்

0

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. படத்தின் ட்ரெய்லர் பார்க்கும்போது சிவகார்த்திகேயனின் டான் பட சாயல் இருப்பதாக பலரும் விமர்சித்தனர்.

ஆனால் படம் பார்த்த பிறகு தான் டிராகன் முற்றிலும் மாறுபட்ட படம் என்பது புரிந்தது. அதனால் பாசிட்டிவ் விமர்சனமும் அதிகம் வந்து படத்தின் வசூலுக்கு உதவியது.

பெரிய அளவில் டிராகன் வசூல் சாதனை படைத்த நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அடுத்து யாருடன் கூட்டணி சேர போகிறார் என பல்வேறு செய்திகள் பரவி வருகிறது.

நடிகை அஞ்சலியா இப்படி.. வேற லெவல் கவர்ச்சி போட்டோஷூட்

வதந்தி பரப்பாதீங்க..

அஸ்வத் மாரிமுத்து அடுத்து சிம்புவுடன் தான் கூட்டணி சேர இருக்கிறார் என ஒரு செய்தி சமீபத்தில் பரவியது. மேலும் வேறொரு ஹீரோ உடன் ஒரு படமும் உறுதியாகி இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது.

ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை என தற்போது அஸ்வத் ட்விட்டரில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். “தயவுசெய்து என் அடுத்த படங்களின் லைன்அப் பற்றி வதந்திகள் பரப்பாதீங்க. எதாவது இருந்தால் நானே முதல் ஆளாக அறிவிக்கிறேன். நன்றி” என அவர் பதிவிட்டு இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version