Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் மின்சார திட்ட மேம்பாடுகளுக்காக ஒப்புதல் அளித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கையில் மின்சார திட்ட மேம்பாடுகளுக்காக ஒப்புதல் அளித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் மின்சாரத் துறையின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, 100 மில்லியன் டொலர் பெறுமதியான கொள்கை அடிப்படையிலான கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காப்யூமி கடானோ (Takafumi Kadono) தெரிவித்துள்ளார்.

மின்சாரத் துறை

ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டவுடன், மின்சாரத் துறையின் அபிவிருத்திக்காக, ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டு மே மாதமும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, 100 மில்லியன் கடனுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.

NO COMMENTS

Exit mobile version