Home இலங்கை பொருளாதாரம் இலங்கைகக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய பாரிய நிதி

இலங்கைகக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய பாரிய நிதி

0

இலங்கையின் இரண்டாம் நிலை சிகிச்சை பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தவும், நோய்
தடுப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் 106.9 மில்லியன் அமெரிக்க டொலர்
நிதி தொகுப்பை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இன்று (01.08.2025) அங்கீகரித்துள்ளதாக
தெரிவித்துள்ளது.

இரண்டாம் நிலை பராமரிப்பு

இந்தத் தொகுப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க
டொலர் கடனும், தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை மற்றும் பதிலளிக்கு
நிதியத்திடமிருந்து 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் மானியமும் அடங்கும்.

இந்தத் திட்டம் வைத்தியசாலை மேம்பாட்டை ஆதரிக்கும், விசேட சிகிச்சைக்கான
அணுகலை விரிவுபடுத்தும் மற்றும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்புக்கு
இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி
தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆய்வகங்களை மேம்படுத்துதல், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துதல்
மற்றும் நோய் கட்டுப்பாட்டு மையத்தை நிறுவுதல் மூலம் சுகாதார அமைப்பின்
மீள்தன்மையை மேம்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version