Home இலங்கை அரசியல் போலி கல்வித்தகமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டும்: வலியுறுத்தும் நாமல்

போலி கல்வித்தகமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டும்: வலியுறுத்தும் நாமல்

0

சபாநாயகர் அசோக ரன்வல (Asoka Ranwala) நாடாளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளினால் அவர் சபாநாயகர் தனது பதவியை பதவி விலகல் செய்தமை பாராட்டத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவொன்றை முன்வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்ட கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கலாநிதி பட்டம்

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக்க ரன்வல நேற்றையதினம் (13.12.2024) தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இதேவேளை, சபாநாயகர் அசோக ரன்வெல(ashoka rangwalla) தனது பட்ட தகுதியை நிரூபிக்க முடியாமல் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் ஆளும் அநுர அரசின் மற்றுமொரு எம்பியின் பட்ட தகுதி தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியில்(npp) இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின்(Kosala Nuwan Jayawira) கல்வித் தகைமை தொடர்பிலேயே சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பொதுத் தேர்தல் பிரசாரக் காலத்தில் தன்னைப் பொறியியலாளர் என்று அவர் விளம்பரப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version