கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையில் நிறைவடைந்தது.
இன்று (21) அனைத்து பங்கு விலைக் குறியீடும் 70 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அனைத்து பங்கு விலைக் குறியீடும் 70.38 புள்ளிகள் உயர்ந்து 19,044.08 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
39 பில்லியன் ரூபா
இது ஜூன் 12, 2025 அன்று பதிவான முந்தைய அதிகபட்சமான 18,973.70 புள்ளிகளை விஞ்சியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதற்கிடையில், S&P SL20 குறியீடு 8.44 புள்ளிகள் குறைந்து 5,646.66 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தகம் 39 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
