Home இலங்கை சமூகம் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

 கடந்த மாதம் 23ஆம்திகதி கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற ஒரு அரச உத்தியோகத்தர் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு என்னை அழைத்துச்சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ்முறைப்பாடு செய்யப்பட்ட போதும், அவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இதனை கூறியுள்ளார்.

“கடந்த மாதம் 23ஆம்திகதி கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற
ஒரு அரச உத்தியோகத்தர் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு என்னை அழைத்துச்சென்றார்.

 கூட்டு முயற்சி

இவ்வாறு அவருடைய வீட்டிற்குச் சென்றபோது அங்கு என்மீது தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக தண்ணீரூற்று பகுதி எரிபொருள் நிரப்பு நிலைய முகவராகவுள்ள வர்த்தகர்,
மற்றைய நபர் அரச படைகளுடன் கடந்த காலங்களில் சேர்ந்தியங்கிய ஒரு
ஆயுதக்குழுவுடைய மத்தியகுழு உறுப்பினர், மற்றையவர் புலம்பெயர் நாட்டிலிருந்து
வருகை தந்துள்ளவர் உள்ளிட்டவர்கள் என்மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு
பணத்தினை வழங்கி இந்தத் தாக்குதலை ஊக்கப்படுத்தியுள்ளனர்.

கடந்தமாதம் முதலாம்திகதி கிளிநொச்சியிலிருந்து ஒரு என்ற தொலைபேசி
இலக்கதிலிருந்து ஒரு நபர் அழைப்பினை மேற்கொண்டு, கிளிநொச்சி மாவட்டத்தைப்
பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினருடைய பெயரைப்
பயன்படுத்தி, தான் அவரின் ஆதரவாளர் எனக்
குறிப்பிட்டு என்னைக் கொலை செய்வேன் என மிரட்டியும், தகாத வார்த்தைகளால்
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இந்த 23ஆம்
திகதி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக நான் கருதுகின்றேன்.

இந்த தாக்குதலுடன் இருவேறு தரப்புக்களுக்குத் தொடர்பிருக்கின்றது.

ஒரு தரப்பு
அரசியல் தரப்பு, மற்றையது முல்லைத்தீவு மாவட்டத்திலிருக்கிற முக்கியத்துவம்
வாய்ந்த ஒரு நிர்வாகத்தை முறையற்ற விதத்தில் தாம் கைப்பற்ற வேண்டும்
என்பதற்காக முயற்சிசெய்கின்ற தரப்பு.

இவ்வாறு இரண்டு தரப்புக்களுடைய கூட்டு
முயற்சியில் தான் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில், தாக்குதலுடன் தொடர்புடைய ஐந்து
நபர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள்
தற்போது சுதந்திரமாக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிகின்றது.

எனவே சட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் மீது சந்தேகப்பட வேண்டியிருக்கின்றது.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version