Home முக்கியச் செய்திகள் ஆண்கள் கையில் காப்பு அணிவதற்கு பின்னால் இப்படி ஒரு விஷயமா?

ஆண்கள் கையில் காப்பு அணிவதற்கு பின்னால் இப்படி ஒரு விஷயமா?

0

பொதுவாக காப்பு என்பது தீய சக்திகளிடம் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக அணிந்து கொள்வதாகும். இதை பல்வேறு உலோகங்களில் ஆண்கள் பலர் அணிந்து கொள்கிறார்கள்.

இத்தகைய காப்புகளை அணிவதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவிதமான நன்மைகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களால் ஆன காப்பினை அணிந்து கொள்வதால் அளவில்லாத நன்மைகள் நமக்கு கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

அதன்படி, ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக சில உலோகங்களுக்கு நேர்மறை ஆற்றல்களையும், பிரபஞ்ச சக்திகளையும் ஈர்க்கும் தன்மை உண்டு. இவற்றை முறையாக பயன்படுத்தும் போது அளவில்லாத பலன்களை நம்மால் பெற முடியும்.

பெண்கள் வளையல் அணிய காரணம் 

பெண்கள் கையில் வளையல் அணிவது பாரம்பரிய வழக்கம், மங்கலத்தின் அடையாளமாக சொல்லப்படுகிறது. பெண்கள் கையில் வளையல் அணியாமல் இருக்கக் கூடாது.

வளையல் அணியாமல் விளக்கேற்றக் கூடாது. வளையல் அணியும் பெண்களிடம் மகாலட்சுமி குடியிருப்பதாக சொல்லப்படுகிறது.

பெண்களைப் போல் ஆண்கள் சிலரும் கையில் வளையல் போன்று அணிந்திருப்பதை காணலாம். இதனை காப்பு என்று சொல்லுவதுண்டு. தங்கம், வெள்ளி, செம்பு என பலவிதமான உலோகங்களில் ஆண்கள் அணிவது உண்டு.

ஆண்கள் காப்பு அணிய காரணம்

ஆண்கள் அணியும் காப்பு வெறும் அழகிற்காக அணிவது கிடையாது. இதற்கு பின்னால் ஆன்மிக மற்றும் ஜோதிட காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சில குறிப்பிட்ட உலோகங்களால் செய்யப்பட்ட காப்புகளை அணியும் போது அது வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

பொதுவாக வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணியும் போது காயம், நோய் ஆகியவற்றில் இருந்து விரைவில் குணம் பெற உதவும்.

உடலில் நோய் எதிர்ப்பு நுண்கிருமிகள் உற்பத்தியை தூண்டுகிறது, ஐந்து உள்ளுறுப்புகள் பாதிப்பில் இருந்து காக்கிறது. நோய் கிருமிகளை அழிப்பதுடன், நேர்மறை ஆற்றல்களை அதிகரித்து, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. மனித உடலில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்களை உள்ளிழுத்துக் கொள்கிறது.

you may like this…!

https://www.youtube.com/embed/NFTrHdbTesA

NO COMMENTS

Exit mobile version