Home முக்கியச் செய்திகள் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு

0

அஸ்வெசும கொடுப்பனவு பெறாத குடும்பங்களை சேர்ந்த மாணர்களுக்கு ரூ. 6,000 கொடுப்பனவு வவுச்சர் வடிவில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெற்றோரை இழந்த மாணர்கள், மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் மாணர்கள், சிறுவர் இல்லங்களில் படிக்கும் மாணர்கள் மற்றும் சிறப்பு காரணங்களால் ஆதரவற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

தகுதியுடைய மாணவர்கள்

இதேவேளை, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து பாடசாலைக்குச் செல்கின்ற அனைத்து மாணவர்களுக்கும், மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற பௌத்த துறவற மாணவர்கள் மற்றும் ஏனைய மாயவர்களுக்கும் 6,000 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியிலுள்ள 10,096 பாடசாலைகளில் மொத்தமாக 300 மாணவர்களை விடவும் குறைந்த மாணவர்கள் கல்வி பயில்கின்ற 6,576 பாடசாலைகளிலுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும்.

அமைச்சரவை அங்கீகாரம் 

இந்த நிலையில், கொடுப்பனவை வவுச்சர் ஒன்றின் மூலம் வழங்குவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்தோடு, அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கும் 6,000 ரூபா கொடுப்பனவு தற்போது அக்குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version