Home இலங்கை அரசியல் அஸ்வெசும நலன்புரித்திட்டம் குறித்து ஆராய விசேட குழு நியமனம்

அஸ்வெசும நலன்புரித்திட்டம் குறித்து ஆராய விசேட குழு நியமனம்

0

அஸ்வெசும நலன்புரித்திட்ட (Welfare Benefits Board) உதவித்தொகை கொடுப்பனவு குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதவித்தொகை வழங்கும் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் (Vijitha Herath) ஆலோசனைக்கு அமைய மேலதிக செயலாளர் சனலி பியசேனவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டதாக சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு

அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் நலன்களை வழங்குவதில் காணப்படும் அசௌகரியங்கள், நியாயமற்ற செயல்முறை மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களுக்கு அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக கணக்கெடுப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பணி மேலும் தாமதமாகும் எனவும் மாவட்டச்செயலக வட்டாரங்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version