ஐரோப்பா (Europe) நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு மொரிட்டானியா (Mauritania) கடற்கரையில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், 170 பேர் பயணித்த குறித்த படகில் 89 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 89 புலம்பெயர்ந்தோரின் உடல்களை கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளதாக மொரிடானியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காவல்படையினர்
இதில், ஐந்து வயது சிறுமி உட்பட ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் கேனரி தீவுகளை அடைய முயன்ற போது5,000 புலம்பெயர்ந்தோர் கடலில் இறந்ததாக இடம் பெயர்வு உரிமைகள் குழுவான வாக்கிங் பார்டர்ஸ் கடந்த ஜூன் மாதம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.