Home உலகம் லெபனானில் வாக்கி டாக்கி வெடித்து 3 பேர் பலி

லெபனானில் வாக்கி டாக்கி வெடித்து 3 பேர் பலி

0

லெபனான் (Lebanon) தெற்கு பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டில் (Beirut) பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லாவிரின் (Hezbollah) தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வாக்கி டாக்கி தாக்குதல் நேற்று (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவமனை

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் நேற்றுமுன் (17) தினம் நூற்றுக்கணக்கில் அடுத்தடுத்து வெடித்ததில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 3000க்கும் மேற்பட்டோர் வரை படுயாகம் அடைந்தனர்.

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்தன.

இந்த நிலையிலே நேற்று ஹிஸ்புல்லாவிரின் தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் (Israel) காரணம் என்று ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version