Home இலங்கை குற்றம் கிளப் வசந்த விவகாரம்: கொலையாளிகள் தொடர்பில் விசாரணை குழுக்கள் வெளியிட்டுள்ள சந்தேகம்

கிளப் வசந்த விவகாரம்: கொலையாளிகள் தொடர்பில் விசாரணை குழுக்கள் வெளியிட்டுள்ள சந்தேகம்

0

அத்துருகிரியவில் கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும்  நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என விசாரணை குழுக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இவர்கள் தென் கடற்பகுதியிலிருந்து படகில் நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

இந்த வாடகை கொலையாளிகள் தப்பிச்சென்றுள்ளதாக தகவல் கிடைத்த பல இடங்களில் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சோதனையிட்ட போதிலும் அவர்கள் தொடர்பில் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துருகிரிய பிரதேசத்தில் (08) திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

 

10 பொலிஸ் குழுக்கள் விசாரணை

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய இருவரும் பாதுகாப்புப்பிரிவில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது

மேலும், கிளப் வசந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 10 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவளித்த 07 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களோ அல்லது அதை திட்டமிட்டவர்களோ இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version