Home சினிமா அட்லீயின் லுக் பற்றி மோசமாக பேசிய ஹிந்தி டிவி நடிகர்.. அட்லீ அங்கேயே கொடுத்த பதிலடி

அட்லீயின் லுக் பற்றி மோசமாக பேசிய ஹிந்தி டிவி நடிகர்.. அட்லீ அங்கேயே கொடுத்த பதிலடி

0

அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் தடம்பதித்துவிட்டார். ஹிந்தியில் அவர் இயக்கிய ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து சல்மான் கானை வைத்து அவர் படம் இயக்க போகிறார்.

மேலும் அட்லீ தற்போது பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தை தயாரித்து இருக்கிறார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் அந்த படம்.

அட்லீ லுக் பற்றி மோசமாக பேசிய கபில் சர்மா

ஹிந்தியில் பிரபல டிவி ஷோவான கபில் சர்மா ஷோவுக்கு அட்லீ மற்றும் பேபி ஜான் படக்குழுவினர் சென்று இருக்கின்றனர். அப்போது அட்லீயின் தோற்றம் பற்றி கபில் சர்மா கிண்டல் செய்யும் வகையில் பேசி இருக்கிறார்.

அதற்கு பதில் கொடுத்த அட்லீ. “ஏ.ஆர்.முருகதாஸ் சார் தான் என் முதல் படத்தை தயாரித்தார். எனது லுக் பற்றி அவர் கவலைப்படவில்லை. நான் கதை சொன்ன விதத்தை தான் அவர் பார்த்தார். தோற்றத்தை வைத்து எடைபோடாதீங்க. மனது எப்படி இருக்கிறது என பார்த்து எடைபோடுங்க” என அட்லீ பதிலடி கொடுத்து இருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version