தேசபிரேமி ஜாதிக பெரமுன அமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டமொன்றுக்கு ஜே.வி.பி ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின்யின் குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக குறித்த அமைப்பின் தேசிய உறுப்பினரான சட்டத்தரணி நுவன் பல்லந்துடாவ தெரிவித்துள்ளார்.
தேசபிரேமி ஜாதிக பெரமுனின் ஏற்பாட்டில் பொது கூட்டமொன்று நேற்று (12) கொழும்பில் உள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
தாக்குதல்
அந்த கூட்டத்தில் ஜே.வி.பி தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஒன்று உருவாகி சிலரால் தடிகளை கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தாக்குதலை நடத்தியது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின்யின் குழுவே என தேசபிரேமி ஜாதிக பெரமுன அமைப்பு தெரிவித்துள்ளது.