Home முக்கியச் செய்திகள் யாழில் வீடொன்றிற்குள் நுழைந்த குழுவினரால் தாக்குதல்! மூவர் வைத்தியசாலையில்

யாழில் வீடொன்றிற்குள் நுழைந்த குழுவினரால் தாக்குதல்! மூவர் வைத்தியசாலையில்

0

யாழ். கோப்பாய் காவல்துறை பிரிவு, கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் சென்று கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீடு மற்றும் சொத்துக்களைத் தாக்கி சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் புதன்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த வியடம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காயமடைந்த மூவர் 

இந்நிலையில் இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் வீடு மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்துள்ளதுடன் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version