Home இலங்கை சமூகம் யாழில் வன்முறையில் ஈடுபட்ட மர்ம கும்பல்: தொடரும் விசாரணைகள்

யாழில் வன்முறையில் ஈடுபட்ட மர்ம கும்பல்: தொடரும் விசாரணைகள்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வன்முறை கும்பலொன்றினால் வான் மற்றும் கார் தீ வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (07) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – கோப்பாய் (Kopay) பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் மற்றும் கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தாக்குதல் நடத்தி, வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வாகனங்களின் உரிமையாளர்

இதன்போது அதை பார்த்த வீட்டார் தீயினை அணைக்க முயன்றபோது, வாகனங்களின் உரிமையாளரினது தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில் தீக்காயங்களுக்குள்ளான குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

Source: https://ibctamil.com/article/attack-in-jaffna-vehicles-set-on-fire-1725778188

NO COMMENTS

Exit mobile version