Home இலங்கை சமூகம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு கடினமானதல்ல : ஜனாதிபதி வேட்பாளர் திட்டவட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு கடினமானதல்ல : ஜனாதிபதி வேட்பாளர் திட்டவட்டம்!

0

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2000 ரூபாயாக மாற்றுவது கடினமானதல்ல என ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.

ஆனால் அது அறிவியல் பூர்வமாக செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சர்வஜன அதிகாரம் நேற்று (07) நுவரெலியாவில் (Nuwara Eliya) ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் காணொளி தொழில்நுட்பம் மூலம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 

பெருந்தோட்ட கம்பனி

இங்கு மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர, “பெருந்தோட்ட கம்பனிகளிடம் மட்டும் கட்டணத்தை வசூலித்து இந்தத் தொகையைப் பெற முடியாது என்று நினைக்கிறேன். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது.

வரலாறு முழுவதும், வாக்குறுதிகள் நிறைந்த அந்த அரசியல் மேடை, உங்களின் இந்த கசப்பான வாழ்க்கையை மட்டுமே உங்களுக்கு விட்டுச் சென்றுள்ளது. இதை மாற்ற விரும்புகிறோம். அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைத்தோம்.

உங்கள் வீட்டிற்கு வரும் வருமானம் குறைந்தது 100,000 ரூபாவாக இருக்கும் என்பதை இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைத்துள்ளோம்.“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version