Home இலங்கை அரசியல் ரணில் – அநுரவை கடுமையாக விமர்சித்த சஜித் பிரேமதாச

ரணில் – அநுரவை கடுமையாக விமர்சித்த சஜித் பிரேமதாச

0

ரணில் விக்ரமசிங்கவும், அநுரகுமார திசாநாயக்கவும் புதிய அரசியல் திருமண
விருந்து உண்ணுகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டைத் தீயிட்டுக் கொளுத்துகின்றவர்களுக்கும் கொலைகளைச் செய்கின்றவர்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொறுப்புக் கூறுகின்ற முறை

“ரணில், அநுர இருவருக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இல்லை.
இவர்களில் ஒருவருக்கு மக்களின் இதயத்துடிப்பு தெரிவதில்லை.

220 இலட்சம்
மக்களின் எதிர்பார்ப்பு ஆசை, துன்பம், வேதனை, என்பவற்றையும் அறிவதில்லை.
இவர்களில் மற்றவர் அனைத்தையும் சீரழிக்கின்ற – எரியூட்டுகின்ற சமூகப்
படுகொலைகளை முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்றவர்.

200 ஆடைத் தொழிற்சாலைகளை
உருவாக்குகின்ற பணி முன்னெடுக்கப்பட்டபோது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து
பிரேமதாச உருவாக்கும் ஆடை தொழிற்சாலைகளைத் தீயிட்டு கொளுத்துவதாக எச்சரிக்கை
விடுத்தவர்.

பாரிய அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், மக்களின் வாழ்க்கை
நிலை மோசமடைந்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சுத்தமான ஆட்சி ஒன்றின் ஊடாக
220 இலட்சம் மக்களுக்கும் பொறுப்புக் கூறுகின்ற முறையிலான பொதுமக்களை மையமாகக்
கொண்ட அரசாட்சி முறையொன்றை இந்த நாட்டுக்குள் கட்டியெழுப்புவோம்.” என்றார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

Source: https://tamilwin.com/article/sajith-s-election-campaign-meeting-1725783629

NO COMMENTS

Exit mobile version