Home இலங்கை சமூகம் கடவுச்சீட்டு விவகாரம்: பின்னணியில் இருப்பவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை

கடவுச்சீட்டு விவகாரம்: பின்னணியில் இருப்பவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை

0

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் (Department of Immigration and Emigration) கடவுச்சீட்டு வழங்குவதில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய கடவுச்சீட்டு பற்றாக்குறையானது இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு விநியோகம்

இந்த நாட்களில் கடவுச்சீட்டு பெற வருபவர்கள் ஒரு கிலோ மீற்றர் வரை வரிசையில் நிற்கின்றனர்.

தற்போதைய விசாரணைகளுக்கமைய, நாளொன்றுக்கு சுமார் 3000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும்.

அடுத்த வருடமும் தற்போதுள்ள கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என பற்றாக்குறை இருப்பதாக பாசாங்கு செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் ஆகியோர் இது தொடர்பில் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முறைப்பாடுகள் 

இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தொழில் பயணம் என்ற போர்வையில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

அலுவலகம் அருகே நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும், இதனால் கடும் பாதுகாப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பான விசாரணையில் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதால், இதற்கு காரணமானவர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது”என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version