Home இலங்கை குற்றம் யாழில் இனம் தெரியாத நபர்களால் வீடொன்று மீது தாக்குதல்

யாழில் இனம் தெரியாத நபர்களால் வீடொன்று மீது தாக்குதல்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – ஆனைக்கோட்டையில் உள்ள வீடொன்று இனந்தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பமானது, நேற்று (03) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, கிறிஸ்துராஜா கொலின்ஸ் என்பரது வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

பொலிஸ் விசாரணை 

அதேவேளை, வீட்டின் உரிமையாளர் கடந்த காலத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமை புரிந்தவர் என தெரியவருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் வீட்டார் நித்திரையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிளில்
வாள்களுடன் வந்த 4 பேர் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மோட்டார்
சைக்கிளை சேதப்படுத்திவிட்டும் சென்றுள்ளனர். 

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/attack-on-a-house-by-unknown-people-in-jaffna-1730736726

NO COMMENTS

Exit mobile version