Home இலங்கை அரசியல் தந்தை மகன் மீதான கொடூர வாள் வெட்டு! காவல்துறையிடம் அறிக்கை கோரியுள்ள எம்பி

தந்தை மகன் மீதான கொடூர வாள் வெட்டு! காவல்துறையிடம் அறிக்கை கோரியுள்ள எம்பி

0

போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவின‌ரால், அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ரௌடிகள் தொடர்பாக மக்கள் காவல்நிலையத்துக்கு வர அச்சப்படும் சூழ் நிலை காணப்படுகிறது.

காவல்துறையினருக்கு  வழங்கும் தகவல்கள் குற்றவாளிகளுக்கு உடனேயே கடத்தப்படுகிறது என்ற விடயம் தொடர்பாக விளக்கம் கோரினேன்.

காவல்துறையினரும் உடந்தை

பருத்தித்துறையில் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரினேன்.

இந்த விடயங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து விடயங்களை தெரிவிக்க உள்ளேன்.

பல விடயங்களில் காவல்துறையினரும் உடந்தையாக உள்ளனர் என மக்கள் எனக்கு தந்த முறைப்பாடுகளையும் தெரிவித்தேன்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version