Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் பெண்ணின் வீட்டை அடித்து நொருக்கிய மர்ம கும்பல்

தமிழர் பகுதியில் பெண்ணின் வீட்டை அடித்து நொருக்கிய மர்ம கும்பல்

0

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு உட்பட்ட முகமாலை பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்மணி ஒருவரது வீடு அடித்து நொருக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் தாயும் மகளும் வாழ்ந்து வந்த நிலையில் மகள் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார்.

காவல்துறை  விசாரணை

இந்நிலையில் தாயார் அருகில் உள்ள வீடு ஒன்றில் இரவுவேளைகளில் பாதுகாப்பு கருதி உறங்குவது வழமையாக இருந்த நிலையிலேயே குறித்த வீடு அடித்து நொருக்கப்பட்டு வீட்டின் சில பகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டு பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.

நேற்று தாக்குதலுக்கு உள்ளானவரின் மகனது வீடும் கடந்த வருடம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/attack-on-house-in-muhamalai-1719161904?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version