Home இலங்கை குற்றம் யாழில் ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்

யாழில் ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்

0

யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நேற்று(23) மாலை ஊடகவியலாளரின்
மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் மரியசீலன் திலைக்ஸ் நேற்று பிற்பகல்
3:30 மணியளவில் முன்பள்ளி ஒன்றின் விளையாட்டு நிகழ்வை செய்தி
சேகரிப்பதற்காக சென்றுள்ளார்.

பொலிஸார் விசாரணை

மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த
வேளை குறித்த விளையாட்டு நிகழ்வை பார்ப்பதற்காக வந்திருந்த இனம்
தெரியாதவர்களால் ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டதை தொடர்ந்து மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

வடமராட்சி கிழக்கில் ஊடக சுதந்திரம் அடக்கப்படும் முயற்சியாக இது
காணப்படுவதால் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் விரைந்து கைது
செய்ய வேண்டுமென அப்பகுதி சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version