Home இலங்கை சமூகம் கோர விபத்துக்குள்ளான பேருந்து: ஒருவர் பலி – பலர் காயம்

கோர விபத்துக்குள்ளான பேருந்து: ஒருவர் பலி – பலர் காயம்

0

தங்காலை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த விபத்து சம்பவம் இன்று (24.05.2025) அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணை

இதில் பேருந்தில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவரின் உடல் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து தொடர்பில் தங்காலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

https://www.youtube.com/embed/KK9XrF6J0do

NO COMMENTS

Exit mobile version