Home இலங்கை சமூகம் திருகோணமலையில் நகரசபை ஊழியர் மீது தாக்குதல்

திருகோணமலையில் நகரசபை ஊழியர் மீது தாக்குதல்

0

Courtesy: H A Roshan

திருகோணமலை நகரசபை ஊழியரின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அண்மித்த கடைத்தொகுதி ஒன்றில் தடை செய்யப்பட்ட கசிப்பு ரக மதுபானம் விற்பனை செய்யப்பட்ட கடையானது திருகோணமலை நகரசபையினரால் முத்திரை குத்தப்பட்டு பூட்டப்பட்டது.

இதன் பின்னணியிலேயே நகரசபை ஊழியர் தாக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தடை செய்யப்பப்பட்ட மதுபான விற்பனை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

கடந்த வாரம் திருகோணமலை – திருகோணேஸ்வர ஆலயத்தினை அண்மித்த கடை ஒன்றில் தடை செய்யப்பப்பட்ட கசிப்பு வகை மதுபானம் விற்பனை செய்ததாக கருதப்பட்டு குறித்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் 30.06.2024 குறித்த கடைக்கு முத்திரை குத்தி பூட்டப்பட்டதாக திருகோணமலை நகரசபை செயலாளர் தே.ஜெய விஷ்னு செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று நகரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நகரசபை அதிகாரிகள்

குறித்த பகுதிக்கு நகரசபை அதிகாரிகள் விரைந்து அதனை முத்திரையிட்டு மூடுவதற்கான நடவடிக்கைகளை மேட்கொண்ட போது அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அரச கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு நகரசபை உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

இதன்போது தாக்கப்பட்ட நபர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நகரசபை செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த காக்குதல் இடம்பெற்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த பொலிஸார் அதனை தடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version