Home உலகம் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்: பலர் உயிரிழப்பு

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்: பலர் உயிரிழப்பு

0

இஸ்ரேல் (Israel) – ஹமாஸ் (Hamas) போர் நீடித்து வரும் நிலையில் காசாவின் (Gaza) தெற்கு நகரமான ரபாவிற்கு வெளியே இடம் பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், இதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

இதுவரை காசாவில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலும் குழந்தைகளும், பெண்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/attack-on-refugee-camp-in-raba-gaza-25-killed-1719049712

NO COMMENTS

Exit mobile version