Home உலகம் இஸ்ரேலை நோக்கி சீறிப்பாயப்போகும் ஈரானின் சக்திவாய்ந்த ஏவுகணைகள்

இஸ்ரேலை நோக்கி சீறிப்பாயப்போகும் ஈரானின் சக்திவாய்ந்த ஏவுகணைகள்

0

ஈரான்(iran), இஸ்ரேல்(israel) மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது, அது முந்தைய இரண்டு தாக்குதல்களில் பயன்படுத்தப்படாத மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகள் மற்றும் “பிறஆயுதங்களை” பயன்படுத்தவுள்ளதாக,ஈரானிய மற்றும் அரபு அதிகாரிகள் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்குத் தெரிவித்துள்ளனர்.

 ஈரான், இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் மாதம் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒக்டோபர் 26 அன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

கடுமையான பதிலடி

இவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக தாம் நடத்தப்போகும் தாக்குதல்”வலுவானதாகவும் சிக்கலானதாகவும்” இருக்கும் என்று தெஹ்ரான், எகிப்தை தனிப்பட்ட முறையில் எச்சரித்ததாக எகிப்திய(Egypt) அதிகாரி ஒருவர் தி ஜர்னலுக்கு தெரிவித்தார்.

ஈரானிய அதிகாரி ஒருவர் கூறுகையில், அதன் இராணுவம் நான்கு வீரர்களையும் ஒரு குடிமகனையும் இழந்ததால், பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஈரான் இராணுவம்

ஏப்ரல் 13-14 மற்றும் ஒக்டோபர் 1 ஆகிய திகதிகளில் இஸ்லாமிய புரட்சிகர காவலர்களால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை குறிக்கும் வகையில் ஈரானின் இராணுவம் இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்று அறிக்கை கூறுகிறது.

இந்த தாக்குதல் இஸ்ரேலிய இராணுவ தளங்களை “கடந்த முறை விட மிகவும் ஆக்ரோஷமாக” குறிவைக்கும் என்றும், ஈராக்கிய(Iraqi) பிரதேசம் எறிகணைகளை ஏவுவதற்கு பயன்படுத்தப்படலாம் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version