Home இலங்கை சமூகம் கேகாலை பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரியின் மீது தாக்குதல்

கேகாலை பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரியின் மீது தாக்குதல்

0

கேகாலை பொது மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும் அறுவை சிகிச்சை நிபுணருமான
மருத்துவ அதிகாரி ஒருவர் நேற்று மருத்துவமனை வளாகத்திற்குள் கொடூரமாக
தாக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனை பாதையில் நடந்து செல்லும்போது கர்ப்பிணிப் பெண்ணுடன் தற்செயலாக
தொடர்பு கொண்டதாகக் கூறிய, பொதுமகன் ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அடையாள பணிப்புறக்கணிப்பு

இந்த சம்பவம் மருத்துவ நிபுணர்களிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இதனையடுத்து, உடனடி நடவடிக்கைகளுக்கு சுகாதாரப் பராமரிப்பு தொழிற்சங்கங்களும்
அழைப்பு விடுத்துள்ளன.indra

அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் இந்தத் தாக்குதலை வன்மையாகக்
கண்டித்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இன்று நண்பகல் வரை கேகாலை
மாவட்டத்தில் ஒரு அடையாள பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version