Home இலங்கை அரசியல் ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை அரசாங்கத்தின் மிலேச்சத் தனமான செயல்: தமிழ் எம்.பி கண்டனம்

ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை அரசாங்கத்தின் மிலேச்சத் தனமான செயல்: தமிழ் எம்.பி கண்டனம்

0

Courtesy: Aadhithya

அதிபர்,ஆசிரியர்களின் சம்பள பிணக்குகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டுமென ஒன்றிணைந்த அதிபர்,ஆசிரியர்கள் சங்கம் நடத்திய போராட்டத்தில் அரசாங்கம் மிலேச்சத் தனமாக செயற்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

“உலகத்திலேயே முதலிடம் கொடுக்கப்பட வேண்டியது ஆசிரியர்களுக்கே.

மாதா, பிதா குரு, தெய்வம் என கூறுகின்றார்கள். உலகத்தில் படித்த சமூகத்தை உருவாக்குவது ஆசிரியர்களே.

நீர்த்தாரை பிரயோகம்

ஆனால் அவர்களை கண்மூடி தனமாக நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு தாக்கமுற்பட்டதற்காக அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் போக்கையும் வன்மையாக கண்டிக்கின்றேன்.” என்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கொழும்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் பெரும் பதற்றநிலை தோன்றியிருந்தது.

நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி இலங்கை ஆசிரியர் சங்கமானது போராட்டத்தை தொடர்ந்தது.

இந்நிலையில், பொாலிஸார் போராட்டத்தை கட்டப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட்டனர். கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

நீதிமன்ற தடை

இதேவேளை இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, ஜோசப் ஸ்டார்லிங், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க மற்றும் இவர்களுடனான உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version