Home இலங்கை குற்றம் யாழில் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்குதல்: மூவர் வைத்தியசாலையில்!

யாழில் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்குதல்: மூவர் வைத்தியசாலையில்!

0

யாழ்ப்பாணம்-கோப்பாய், கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் மர்ம கும்பல் புகுந்து மேற்கொண்ட தாக்குதலில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று(9) அதிகாலை சுமார் 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை குறித்த வீட்டிற்குள் புகுந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர்  கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீடு மற்றும்
கார் உள்ளிட்ட சொத்துக்களைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக நடவடிக்கைகளை கோப்பாய்
பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/attack-unidentified-group-jaffna-3-people-hospital-1752050082

NO COMMENTS

Exit mobile version