அட்டகாசம் ரீ ரிலீஸ்
விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
இதை தொடர்ந்து இந்த ஆண்டு போனஸாக வந்த சேர்ந்த திரைப்படம்தான் அட்டகாசம். கடந்த வாரம் ரீ ரிலீஸான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை தந்தனர்.
திரையரங்கங்கள் திருவிழா கோலமாக மாறியது. அந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலானதை நாம் பார்த்தோம்.
வசூல்
இந்த நிலையில், ரீ ரிலீஸான அட்டகாசம் திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 98+ லட்சம் வசூல் செய்துள்ளது.
