ஐம்பது இலட்சத்துக்கு திமிங்கில வாந்தியை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (11) திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
அம்பர் எனப்படும் திமிங்கில வாந்தியை நபரொருவர் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயல்வதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
திவுலப்பிட்டிய – நீர்கொழும்பு வீதியின் போமுகம்மன பிரதேசத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
அவரிடம் இருந்து ஒரு கிலோ மற்றும் 200 கிராம் எடை கொண்ட அம்பர் எனப்படும் திமிங்கில வாந்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
