Home இலங்கை அரசியல் மீண்டும் ராஜித சேனாரத்னவிற்கு பிடியாணை பிறப்பிப்பு!

மீண்டும் ராஜித சேனாரத்னவிற்கு பிடியாணை பிறப்பிப்பு!

0

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் பதிவு செய்வதை தவிர்த்து வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

பிடியாணை 

கிரிந்த துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு சட்ட நடைமுறைகளை புறக்கணித்து வழங்கிய மணல் அகழ்வு ஒப்பந்தம் தொடர்பில் சேனாரத்ன தேடப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அத்துடன் இந்த மணல் அகழ்வு ஒப்பந்தம் ஊடாக அரசுக்கு 26.2 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் வீட்டை விட்டு வெளியேறி தனது தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அதனை ராஜித புறக்கணித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராஜிதவிற்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையிலிருந்து தப்பிக்க அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் இன்று மீண்டும் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version