Home இலங்கை அரசியல் பதவியை தக்க வைக்கும் எண்ணமில்லை! ஜனாதிபதி அநுரவின் முடிவு வெளியானது

பதவியை தக்க வைக்கும் எண்ணமில்லை! ஜனாதிபதி அநுரவின் முடிவு வெளியானது

0

நீண்ட காலத்திற்கு பதவியை தக்க வைத்துக்கொள்ள எந்தவொரு எண்ணமும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் இன்று(12.08.2025) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இன்று நாம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் பதவிகளை வகிப்பதோடு நாடாளுமன்றத்தையும்
பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம்.

தகுதி கொண்ட இளைஞர்கள்

ஆனால், நாங்கள் ஆட்சியை கைப்பற்றும் போது, நாம் பதவி விலகும் மனதில் கொண்டே ஆட்சிக் கதிரையில் அமர்ந்தோம்.

எனினும், இந்த ஆட்சிக் கதிரையில் நீண்ட நாட்களுக்கு அமர எங்களுக்கு விருப்பமில்லை.

இந்த நாட்டை அழித்த ஒரு அரசியல் குழுவிடமிருந்து அதிகாரத்தை பறித்து மக்கள் அதனை எங்களுக்கு வழங்கியிருக்கின்றனர்.

எதிர்காலத்தில் அந்த அதிகாரத்தை உங்களிடம் ஒப்படைக்கும் எதிர்பார்ப்புடன் நாங்கள் இந்த ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருக்கின்றோம்.

தனது நிர்வாகத்திற்குப் பிறகு நாட்டைக் கைப்பற்ற நேர்மை, திறன் மற்றும் தகுதி கொண்ட இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நாடு தழுவிய இளைஞர் கழகங்களின் நிர்வாகிகள் தெரிவு அண்மையில் இடம்பெற்றிருந்தது.

அதன் தேசிய சம்மேளனம் இன்று நடைபெற்ற நிலையில், நாடு முழுவதும் இருந்து சுமார் ஆறாயிரம் இளைஞர், யுவதிகள் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் – ஹஷ்ரப்

NO COMMENTS

Exit mobile version