சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் திருகோணமலை கடற்கரைக்கு முன்னால் இன்று (30) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு சமூகத்தின்
நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
வாக்குவாதம்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பில் (Batticaloa) இருந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் சென்ற பேருந்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருகோணமலைக்கு செல்ல முடியாது என அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இறுதியில் அப்பகுதியில் இருந்து திருகோணமலை செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஓ.எம்.பி (OMP) ஒரு ஏமாற்று நாடகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை,
சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக் கூறலை நாங்கள் கோருகிறோம் உள்ளிட்ட வாசகங்களை
ஏந்தியாறு ஈகை சுடரினை ஏற்றி அழு குரல்களை முன்வைத்து நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.