வாடிவாசல்
வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். விடுதலை படத்தின் தொடர் வேலை காரணமாக வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
ஆனால், தற்போது வாடிவாசல் படத்தை எடுக்க தயாராகி வருகிறார் வெற்றிமாறன். ஆர்.ஜே. பாலாஜியின் படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் சூர்யா இணைவார் என தகவல் வெளிவந்துவிட்டது.
ஆடியோ ரைட்ஸ்
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு படத்தின் ஆடியோ ரைட்ஸ் குறித்து பேசியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ள நிலையில், ஆடியோ ரைட்ஸ் ரூ. 10 கோடி விற்பனை செய்துவிட்டதாக தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.
இது பல நாட்களுக்கு முன் நடந்தது என்றும், அதுவே இப்போது விற்பனை செய்தால் பல மடங்கு அதிக தொகைக்கு விற்பனை ஆகும் என்றும் தாணு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.