Home முக்கியச் செய்திகள் அவுஸ்திரேலியாவில் ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்த விமானம்

அவுஸ்திரேலியாவில் ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்த விமானம்

0

அவுஸ்திரேலியாவில் (Australia) சிறியரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் ஷெல்ஹார்பர் விமான நிலையத்திலுள்ள சிறியரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்புக்குழுவினர் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்துள்ளது.

இதையடுத்து, உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்துள்ளனர்.

விமானம் போதுமான உயரத்தை அடையத் தவறியதால், விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version