Home முக்கியச் செய்திகள் இந்திய அணிக்கு தலைவலியாக மாறியுள்ள அவுஸ்திரேலிய வீரர்

இந்திய அணிக்கு தலைவலியாக மாறியுள்ள அவுஸ்திரேலிய வீரர்

0

 இந்திய(india) அணிக்கு அவுஸ்திரேலிய(australia) துடுப்பாட்ட வீரர் டிராவிஸ் ஹெட்(travis head) பெரும் தலைவலியாக மாறியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

டிராவிஸ் ஹெட் மிகவும் சாதுரியமாக விளையாடுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டிராவிஸ் ஹெட்டிலிருந்து மாற்றமடைந்து, அவரிடம் அதிக முன்னேற்றங்களைக் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, அவர் ஷொட் பந்துகளை விளையாடும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் பந்துகளை லீவ் செய்வதற்கு தயாராகிவிட்டார். பந்துகளை லீவ் செய்வதை அவர் நன்றாக கற்றுக் கொண்டுள்ளார்.

தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம்

டிராவிஸ் ஹெட்டினை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம். அவர் லைன் அண்ட் லென்த்தை நன்றாக கவனித்து சிறப்பாக விளையாடுகிறார். அது அவரது மிகப் பெரிய பலமாக உள்ளது. அவரது கிரிக்கெட் பயணத்தில் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கிறார். அவரைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

இந்திய அணிக்கு தலைவலியாக மாறியுள்ள அவுஸ்திரேலிய வீரர் | Australian Player Become A Headache Indian Team

தலைவலிக்கு மருந்து தேடும் இந்திய அணி

டிராவிஸ் ஹெட் என்ற தலைவலிக்கு இந்திய அணி மருந்து தேடி வருகிறது. ஹெட் என்ற அவரது துணைப் பெயர் இந்திய அணிக்கு தலைவலியாக (ஹெட்ஏக்) உள்ளது. கை வலி, கால் வலிக்கு மருந்து போட்டு குணப்படுத்துவது போல், இந்திய அணி தற்போது டிராவிஸ் ஹெட் என்ற தலைவலிக்கான மருந்து தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது என்றார்.

இந்திய அணிக்கு தலைவலியாக மாறியுள்ள அவுஸ்திரேலிய வீரர் | Australian Player Become A Headache Indian Team

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் திகதி மெல்போர்னில் தொடங்கவுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version