Home இலங்கை அரசியல் அவுஸ்திரேலியாவின் முக்கிய பிரதிநிதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம்

அவுஸ்திரேலியாவின் முக்கிய பிரதிநிதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம்

0

அவுஸ்திரேலியாவின் மாகாண ஆளுநர் ஜெனரல் சமந்தா ஜாய் மோஸ்டின், ஓகஸ்ட் 6 முதல் 10 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தனது விஜயத்தின் போது, ஆளுநர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

அவுஸ்திரேலிய ஆதரவு திட்டம்

மேலும், அவர் பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் அவுஸ்திரேலிய ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களையும் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கை – அஸ்திரேலியா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டது இந்தப் பயணம் எனவும் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version