மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை.
கடந்த வாரம்
நிலாவை கடுப்பேற்றுவதாக நினைத்து காயத்திரி என்கிற பெண்ணை காதலிப்பது போல் சோழன் நடித்தார். ஆனால், அதுவே அவருக்கு தற்போது வினையாகி விட்டது. சோழன் காதலிப்பது போல் நடித்தாலும், காயத்திரி அவரை உண்மையாகவே காதலித்துவிட்டார்.
இது எங்கோ தவறாக போகிறது என்பதை தெரிந்த பின், நான் உன்னை காதலிக்கவில்லை என காயத்திரியிடம் சோழன் கூறிவிட்டார். இத்தனை நாள் பழகிவிட்டு சோழன் இப்போது இப்படி சொல்வதை காயத்திரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
க்ரிஷ் அம்மா இறந்துவிட்டார்… ரோகிணி போட்ட திட்டம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ
புரோமோ வீடியோ
இந்த நிலையில், காயத்திரியின் நண்பர்கள் சோழனின் வீட்டிற்கே வந்து அவரை மிரட்டுகிறார்கள். சோழன் இப்படி செய்ததை அறிந்து அவரை திட்டித்தீர்க்கிறார் சேரன். உனக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கிறார் என்பதை சொல்லி இந்த பிரச்சனையை இப்போதே முடிவுக்கு கொண்டுவா என சேரன் கூறுகிறார்.
ஆனால், தனக்கு நடந்தது உண்மையான திருமணமே இல்லையே, பொய்யான திருமணம் தானே, நிலா வந்து சொல்வாரா, அவர் என்னுடைய மனைவி என்று என சோழன் கேட்கிறார். சோழன் இவ்வளவு பேசினாலும், நிலா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் வாரத்தில் பொறுத்திருந்து பார்ப்போம்.
