Home சினிமா திடீரென ஒரு பெண்ணை வீட்டில் தங்க வைத்துள்ள சேரன், யார் அவர்.. அய்யனார் துணை எபிசோட்

திடீரென ஒரு பெண்ணை வீட்டில் தங்க வைத்துள்ள சேரன், யார் அவர்.. அய்யனார் துணை எபிசோட்

0

அய்யனார் துணை

அய்யனார் துணை, ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தமிழ் தொடர்களில் ஒன்றாக உள்ளது.

4 அண்ணன்-தம்பிகளின் அழகான கதையாக தொடர் உள்ளது, ஒரு விஷயத்தை 2 வாரங்கள் தள்ளிப் போடுவது, அடிதடி சண்டை, வில்லத்தனம் போன்று வழக்கமாக சீரியல்களில் இருக்கும் விஷயங்கள் இந்த தொடரில் இல்லை என்பதே அழகு.

கடைசியாக கதையில் சேரன் ஜாதகத்தை பார்த்த ஒருவர் பெண் தோஷம் உள்ளது, அவரால் தம்பிகளின் வாழ்க்கை சரியாக இருக்காது என சில விஷயங்கள் கூற அவர் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

பின் எப்படியோ சோழன் அண்ணனை கண்டுபிடித்து விட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார்.

எபிசோட்

பின் ஜோசியர் சொன்ன பயணத்தையும் தம்பிகள் ஒரு பிளான் செய்து போக்குகிறார்கள்.

இன்றைய கதையில், நிலா குலதெய்வ கோயில் குறித்து கேட்கிறார், அவர் நடேசன் கூட தெரியாது என்கிறார். சாமி குறித்து சேரன் தனது சித்தப்பாவிடம் கேட்க அதற்கு அவர் எங்களது சாமியை நீங்கள் பார்க்க அனுமதிக்க மாட்டேன், சொல்ல மாட்டேன் என கூறிவிட்டு செல்கிறார்.

இன்றைய எபிசோட் கடைசியில், சேரனுடன் பணிபுரியும் நண்பரின் உறவினர் சந்தாவிற்கு ஒரு ஆபத்து ஏற்பட அதனால் அவரை தனது வீட்டில் தங்க வைக்கிறார்.

சேரன், சோழனுக்கு போன் செய்து அந்த பெண்ணை நமது வீட்டில் தங்க வைக்குமாறு கூற தம்பிகளும் ஓகே சொல்கிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version