அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று அய்யனார் துணை. இப்போது கதையில் நிலா-சோழன், பல்லவன் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
நடேசன், பல்லவன் அம்மாவை சந்தித்ததும் செம கோபம் அடைகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் மெக்கானிக் ஷெட்டை வாங்குவதற்கு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பணம் கொடுக்கிறார்கள், ரூ. 3 லட்சமும் சேர்ந்துவிட்டது.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா… சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ
எபிசோட்
இன்றைய எபிசோடில், பல்லவன் அம்மா பாண்டிக்காக வைத்திருந்த பணத்தை திருடும் போதும் நிலா அதனை பார்த்துவிடுகிறார். அதோடு அவரது கணவருடன் பேசுவதையும் பார்த்து அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.
ஆனால் நிலா இந்த விஷயத்தை யாரிடமும் கூறவில்லை. அடுத்த நாள் காலையில் பல்லவன் தனது அம்மாவை வீடு முழுவதும் தேடுகிறார், எனது அம்மாவை என்ன செய்தீர்கள் என நடேசன் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார்.
பின் அம்மா காணவில்லை என அழுது புலம்பும் பல்லவனை மற்றவர்கள் ஆறுதல் கூறி சமாதானம் செய்கிறார்கள். தற்போது சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன மாற்றம் என்றால் பல்லவன் குரல் தான். அவரது குரல் மாற்றம் சரியாக இல்லை என ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
