விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க வந்த ராதிகாவை கோபியின் அம்மா ஈஸ்வரி தடுத்து திட்டி அசிங்கப்படுத்துகிறார்.
மொத்த குடும்பமும் ராதிகாவை திட்டிக்கொண்டிருக்கிறது. இனி என்ன நடக்கும் என்பது அடுத்த வார ப்ரோமோவில் தற்போது காட்டப்பட்டு இருக்கிறது.
பாக்யாவிடம் கலங்கிய ராதிகா
பாக்யாவிடம் தனியாக பேச வேண்டும் என கூட்டிச்சென்று ராதிகா பேசுகிறார். ‘நான் இந்த கல்யாணத்தையே பண்ணி இருக்க கூடாது’ என சொல்லி கலங்குகிறார்.
பாக்யா தான் கோபியின் மனைவி என ஹாஸ்பிடலில் இருப்பவர்கள் சொன்னதற்கு ராதிகா சண்டை போடுவார் என பார்த்தால்.. ராதிகா எமோஷ்னலாக பேசியது கொஞ்சம் பாக்யாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது.
அதற்கு பாக்யா என்ன செய்தார் என நீங்களே ப்ரோமோவில் பாருங்க.