Home சினிமா அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

0

அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இதை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து படம் பண்ணபோகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 நாட்களில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

அஜித் பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளில் பேசியுள்ளார். அவருடன் நடித்த அனுபவம், பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்கள். அப்படி நடன இயக்குநர் பாபா பாஸ்கர் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்தில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

மனம் திறந்து பேசிய பாபா பாஸ்கர்

“அஜித்துடன் நான் குரூப் டான்ஸ் தான் அடியிருக்கேன். ஏகன் படத்தில் வரும் ஃப்ரீடம் பாடலுக்கு மட்டும் கோரியோக்ராப் செய்திருக்கிறேன். அவரை மாதிரி ஒரு கண்ணாடிய பார்க்கவே முடியாது. ரொம்ப ஓபன்-ஆ இருப்பாரு. திட்டுனா கடுமையா திட்டிருவாரு, அதே மாதிரி பாசம்னா தலையில தூக்கி வைச்சுப்பாரு. அவர் உணவு விஷயத்தில் தொழில்நுட்ப கலைஞர்களை பார்த்துக்கொள்ளும் விதம் எல்லாம், அவர் ஒரு குட்டி எம்ஜிஆர் தான்” என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version