பாபா வங்காவின் (Baba Vanga) 2026 ஆம் ஆண்டு தங்கம் விலை குறித்த கணிப்பு தற்போது வைரலாகி வருகின்றது.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். அவருக்கு பார்வை பறிபோன பின்னர், எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
அவர் இறப்பதற்கு முன்பு, ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்னரே கணித்துள்ளார்.
பின்னர் அவற்றை குறிப்புகளில் எழுதினார். பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்கா கணித்த பல உலக நிகழ்வுகள் உண்மையாகி உள்ளன.
மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருள்
அவற்றில் தற்போது தங்கத்தின் விலை தொடர்பான கணிப்பு உலக மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருகின்றன.
உலக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நிலையற்ற சூழ்நிலைகள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவார்கள் என பாபா வங்கா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியான வணிக மோதல்கள், உலக அளவில் ஏற்படக்கூடிய பணவீக்கம், பொருளாதார பாதிப்பு, அரசியல் பதற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கணித்துள்ளார்.
இந்த கணிப்புகளின் அடிப்படையில் இது உண்மையானால் தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
பூமிக்கு வேற்றுகிரகவாசிகள்
இதேவேளை, கடந்த சில நாட்களாக விண்வெளியில் தெரியும் ‘3I/ATLAS’ என்ற மர்மப் பொருள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது இயற்கையான விண்வெளி பொருள் இல்லை எனவும் இது வேற்றுக்கிரகவாசிகளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பான விண்கலமாக இருக்கலாம் எனவும் ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியற்பியலாளர் தெரிவித்துள்ளார்.
இது, டிசம்பர் 19ஆம் திகதி பூமிக்கு அருகில் வரும் என்று நாசா அறிவித்துள்ளது.
இந்நிலையில் மறைந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா 2026ஆம் ஆண்டில் வேற்றுக்கிரகவாசிகள் தோன்றுவார்கள் என கணித்துள்ள உண்மையாகின்றாதா என்ற கேள்வி எழுந்தள்ளது
