Home சினிமா Sugar Daddy-யின் அர்த்தம் யாருக்கும் தெரியவில்லை.. நடிகர் பப்லூ பிரித்விராஜ் ஓபன் டாக்

Sugar Daddy-யின் அர்த்தம் யாருக்கும் தெரியவில்லை.. நடிகர் பப்லூ பிரித்விராஜ் ஓபன் டாக்

0

பப்லூ பிரித்விராஜ்

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் பப்லூ பிரித்விராஜ். இவர் வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்துள்ளார். சமீபகாலமாக அனிமல், ஏஸ் ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் பப்லூ பிரித்விராஜ், அவரது மனைவி பீனா கடந்த 2022ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின் ஷீத்தல் என்பவருடன் நடிகர் பப்லூ ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார்.

தக் லைஃப் ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

தன்னை விட 30 வயது குறைவான பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் பப்லூ இருந்ததால், இந்த விஷயம் சர்ச்சையானது. ஆனால், இதன்பின் இருவரும் பிரிவித்துவிட்டனர். ஷீத்தலுடன் நடிகர் பப்லூ ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது, அவரை நெட்டிசன்கள் Sugar Daddy என அழைத்தனர்.

பப்லூ ஓபன் டாக்

இந்த நிலையில், நடிகர் பப்லூ இதுகுறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது “பாவம் யாருக்கும் Sugar Daddy-யின் அர்த்தம் தெரியவில்லை. அப்போ என்னுடைய பேங்க் பேலன்ஸ் ஜீரோ. நான் ஒரு சின்ன அப்பார்ட்மெண்ட்ல 20,000 ரூபாய் வாடகை கொடுத்துட்டு இருந்தேன். அப்படி இருக்கும் போது தான் அந்த பொண்ணை நான் சந்தித்தேன். அவங்க அப்பா ஆந்திராவில் போலீஸ் கமிஷனர். அவங்க அம்மா ஒரு லாயர். அந்த பொண்ணு கோடீஸ்வரி. அவங்க என் காசுக்காக வரல. என் அழகுக்கும் அறிவுக்கும்தான் வந்தாங்க. நான் நிறைய காசு வச்சு, பணத்தால் அந்த காதலை வாங்கினால் தான் அதற்கு Sugar Daddy என்று அர்த்தம்” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version