திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குழந்தையொன்று வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்து
உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (24) இடம் பெற்றுள்ளது.
ஒரு வயது எட்டுமாதமும் நிறைந்த மிஹ்ரான் இசான் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை
வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ள குழந்தையை தேடிய போது
சுமார் 100 மீற்றர் தூரத்தில் நீரால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த உயிரிழந்த
குழந்தையின் சடலம் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம்
குறித்த சடலம் ஒப்படைக்கபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம்
தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
