Home முக்கியச் செய்திகள் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை வயல் பகுதியிலிருந்து மீட்பு

பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை வயல் பகுதியிலிருந்து மீட்பு

0

பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தையொன்று வயல்வெளியில்  கைவிடப்பட்ட நிலையில்  இன்று (17) காலை 7.00 மணியளவில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மாவதகம காவல் பகுதியில் உள்ள பரகஹதெனிய-ஜகடுவ சாலையில் உள்ள வயல்வெளிக்கு அருகிலேயே குழந்தை மீட்கப்பட்டது. இன்று (17) காலை 7.00 மணியளவில் மாவதகம காவல்துறைக்கு தகவல் கிடைத்தது, அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையை மீட்டு குருநாகல் போதனா மருத்துவமனையில் ஒப்படைத்ததாக தலைமை ஆய்வாளர் தசநாயக்க தெரிவித்தார்.

 குருநாகல் போதனா மருத்துவமனையில் குழந்தை

குழந்தை குருநாகல் போதனா மருத்துவமனையின் சிறப்பு குழந்தை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் குருநாகல் போதனா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மாவதகம காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் டபிள்யூ.எம்.பத்மசிறியின் அறிவுறுத்தலின் பேரில் பெண் காவல் ஆய்வாளர் நிர்மலா உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version