Home சினிமா Back to the future Part 3 ஒரு சிறப்பு பார்வை

Back to the future Part 3 ஒரு சிறப்பு பார்வை

0

மார்டின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டு இருக்கும் சமயத்தில் டாக்டர் 1885-ம் ஆண்டு தவறுதலாக டைம் ட்ராவல் செய்கிறார், அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மார்டின் நிற்கும் போது ஒருவர் ஒரு கடிதத்தை 1885-ல் உள்ள டாக்டர் உங்களிடக் கொடுக்க சொன்னார் என்பதோடு பார்ட் 2 முடிகிறது. இதுவும் Zee 5 தளத்தில் உள்ளது.

Bact To The Future (First Part): ஒரு சிறப்பு பார்வை

இதில் என்ன கதை

பாகம் 3, மார்டின் பாகம் 2-ல் கிடைத்த லெட்டரை வைத்துக்கொண்டு டாக்டர் 1885-ல் தான் இருக்கிறார் என்பதை அறிந்துக்கொண்டு, 1885-க்கு அதாவது Cowboy காலத்திற்கு டைம் ட்ராவல் செய்கிறார். ஏனெனில் டாக்டர் மேட் டாக் என்பவனால் துப்பாக்கியில் சுடப்பட்டு இருக்கிறார் என்ற விஷயத்தை அறிந்து அதை தடுக்கவும் செல்கிறார்.

அப்படி வந்து சேரும் இடம் தற்போது கல், மண் மற்றும் cowboy களுக்கான சூதாட்ட விடுதி, மதுவிடுதி கொஞ்சம் வீடுகள் அங்கு இருக்கிறது. அதே இடத்தில் கடந்த இரண்டு பாகத்தின் வில்லன் பிஃப்-ன் கொள்ளு தாத்தா அங்கு மேட் டாக் என்ற பெயரில் ஊரையே சூரையாடி வருகிறார்.

இந்த கட்டத்தில் மேட் டாக்-வுடன் மார்டினுக்கு ஒரு சண்டை ஏற்படுகிறது, இதனால் அவனுடன் மோத வேண்டிய கட்டாயம் வருகிறது. இந்நிலையில் டாக்டர் உதவியுடன் எப்படியாவது மார்டின் 1985 செல்ல வேண்டும், அதே நேரத்தில் மேட் டாக்-யும் அழிக்க வேண்டும் என்ற பெரிய டாஸ்-கில் 3ம் பாகம் முடிகிறது.
 

Back To The Future Part 2 ஒரு சிறப்பு பார்வை

இதில் என்ன சிறப்பு

ஒரு படம் ஹிட் ஆனால், 10,15 பாகம் எடுப்பார்கள், அப்பாடியெல்லாமல் இல்லாமல் இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்டிபன் ஸ்பீல்பெர்க், மற்றும் இயக்குனர் ராபர்ட் இருவரும் இது 3 பாகம் தான் அதற்கு மேல் இல்லை என முடிவு செய்ததே மிக அழகு.

1885-ல் எந்த ஒரு வசதியும் இல்லாத காலத்தில் எப்படி 85 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டிதை கொண்டு செல்வது என்று பெரிய அதிர்ச்சிக்கு அதற்கு ஏற்றது இந்த ட்ரெயின் தான், என அதை வைத்து டாக்டர் போடும் திட்டம் சுவாரஸ்யம்.

டாக்டர் கதாபாத்திரம் வெறும் சயிண்ஸ் பற்றி மட்டுமே கடந்த 2 பாகத்தில் பேச, இதில் அழகாக க்ளாரா என்ற காதலியையும் அவருக்கு காட்டி, அவருடன் டாக்டர் சேர்வது போன்று காட்டியது படம் அங்கு தான் முழுமையடைகிறது.

எத்தனையோ டைம் ட்ராவல் படத்தை பார்த்திருப்பீர்கள், ஆனால், எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி இத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் இப்படத்தை கொடுத்த குழுவினர்களுக்கு எத்தனை பாராட்டுகளும் தகும். கண்டிப்பாக பாருங்கள் அல்லது பார்த்தே தீர வேண்டிய படங்கள் லிஸ்டில் இந்த பேக் டு தி பியூச்சர் எப்போதும் இருக்கும். 

NO COMMENTS

Exit mobile version